
அரியலூர் மாவட்டத்தில் 16 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த சாந்தா(28), கீழப்பழுவூர் சந்திரா(30), சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தஞ்சை வினோத்(29), வி.கைகாட்டி பிரேம்(29), பாலச்சந்திரன்(27), செந்துறை தனவேல் (45) ஆகிய 6 பேரை ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸார் நேற்று முன்தினம் காலை கைது செய்தனர். இந்த வழக்கில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கீழப்பழுவூர் ராஜேந்திரன்(62), வெற்றிச்செல்வன்(37), திருமானூர் தெய்வீகன்(44) என மேலும் 3 பேரை போலீஸார் தேடிவந்த நிலையில், அன்றிரவே அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து, போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/xDF9Tns
0 Comments