Crime

விருத்தாசலம்: விருத்தாசலத்தை அடுத்த கருவேப்பிலங்குறிச்சியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் வீரமணி (28). இவரது மனைவி விஜயசாந்தி. இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில், இரு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 18 -ம் தேதி வீட்டில் சமையல் செய்வதில் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வீரமணி அடித்ததில் விஜயசாந்தி மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். தான் அடித்ததில் அவர் இறந்து விட்டதாக கருதிய வீரமணி, போலீஸார் மற்றும் மனைவி குடும்பத்தினருக்கு அஞ்சி சேலையால் வீட்டில் தூக்கிட்டுள்ளார். மயக்கம் தெளிந்து எழுந்த விஜயசாந்தி, வீரமணி தூக்கில் தொங்குவதைக் கண்டு திடுக்கிட்டு, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டார்.

மீட்கப்பட்ட அவர், புதுச்சேரி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் கருவேப்பிலங்குறிச்சி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/TB3Rm8A

Post a Comment

0 Comments