Crime

போச்சம்பள்ளி வட்டம் வாடமங்கலம் அடுத்த சாமண்டப்பட்டியைச் சேர்ந்தவர் சிவானந்த சுந்தரம் (28). ஆன்லைன் மூலம் டிரேடிங் வர்த்தகம் செய்து வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் 13-ம் தேதி, இவரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய நபர், அந்நிய செலாவணி வர்த்தக தளத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக தெரிவித்தார்.

இதனை நம்பிய சிவானந்த சுந்தரம், நபரின் வங்கிக் கணக்கில் ரூ.7 லட்சத்து 62 ஆயிரம் தொகையை செலுத்தியுள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட நபர் அவர் கூறியப்படி பணத்தை திருப்பி தரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சிவானந்த சுந்தரம் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் பிரிவு போலீஸில் புகார் செய்தார். புகாரில் தன்னிடம் மணிகண்டன், கார்த்திக் என்பவர்கள் ரூ.7 லட்சத்து 62 ஆயிரம் ஏமாற்றி விட்டதாக கூறியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/or6FBWv

Post a Comment

0 Comments