Crime

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகில் உள்ள நல்லிவீரன்பட்டியைச் சேர்ந்தவர் பிரவீன். இவரது வீட்டு மாடியில் நேற்று காலை திடீரென வெடிச் சத்தம் கேட்டது. இளைஞர் ஒருவர் மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்டு 40 அடி தூரத்தில் உடல் சிதறிய நிலையில் இறந்துகிடந்தார். தகவலின்பேரில் டிஎஸ்பி நல்லு மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று உயிரிழந்த இளைஞரின் உடலை மீட்டனர். இந்த வெடி விபத்தில் மாடி வீட்டின் சில அறைகள் இடிந்தன.

போலீஸ் விசாரணையில், உயிரிழந்தவர் செக்கானூரணி அருகில் உள்ள தேங்கல்பட்டி தர்மராஜ் மகன் அஜித்குமார் (27) என்பதும், செல்போன் கடை ஊழியரான இவரை விஷேசத்துக்கு வெடிபோடுவதற்காக வரவழைத்திருந்ததும் தெரியவந்தது. இந்த வெடி விபத்தில் காயமடைந்த பக்கத்து வீட்டைச் சேர்ந்த வனிதாவும் (27), அவரது 6 மாத குழந்தையும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன், வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். தலைமறைவான பிரவீனை தேடுகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/dcVUOqC

Post a Comment

0 Comments