
சேலம்: காடையாம்பட்டி அருகே குடும்ப தகராறில் இரு குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்டார்.
காடையாம்பட்டி அடுத்த கணவாய்புதூர் ஊராட்சி கே.மோரூர் காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி பிரபாகரன் (32). இவரது மனைவி மரகதம் (30). இவர்களது குழந்தைகள் செல்வகணபதி (7), கோகுலகண்ணன் (5). கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று காலை தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், பிரபாகரன் வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து பிரபாகரன் வீட்டுக்கு வந்தபோது, மனைவி மற்றும் குழதைகள் வீட்டில் இல்லை. அதிர்ச்சியடைந்த அவர் அக்கம், பக்கம் தேடிப்பார்த்தபோது, வீட்டின் அருகே இருந்த கிணற்றில் மரகதம் மற்றும் இரு குழந்தைகளும் சடலமாக மிதந்தது தெரிந்தது. தகவல் அறிந்து அங்கு சென்ற காடையாம்பட்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் கிணற்றில் இறங்கி 3 பேரின் உடலை வெளியில் எடுத்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/aNrOfvZ
0 Comments