Crime

புதுச்சேரி நகரப்பகுதியை சேர்ந்த 50 வயது பெண், குடிசை மாற்றுவாரிய அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிகிறார். இவருக்கு, அலுவலகத்தில் சக ஊழியரால் பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இவரது புகார் மீது விசாரணை நடத்த தலைமை செயலகம் உத்தரவிட்டது. இதனிடையே அதே அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியரை ஜாதி ரீதியாகதிட்டியதாக, இவர் மீது புகார் அளிக்கப்பட்டது. உருளையன் பேட்டை போலீஸார் எஸ்.எஸ்டி பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கில் ஜாமீன் பெற்ற அப்பெண் ஊழியர் மீண்டும் பணிக்கு சென்று வந்துள் ளார். அங்கு மிரட்டல்கள் தொடர்ந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் வீட்டில்தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு நலமடைந்து வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/AEg0CGpUf

Post a Comment

0 Comments