Crime

ஈரோட்டில் ஈமு கோழி மற்றும் நாட்டுக்கோழி நிறுவனங்கள் நடத்தி ரூ.3.95 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில், கணவன், மனைவிக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

ஈரோடு மாவட்டம் பவானி தாலுகா கேசரிமங்கலம் ரெட்டியார் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் என்.குமார். இவர் ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் கடந்த 2012-ம் ஆண்டு ஆகஸ்ட் 28-ம் தேதி அளித்த புகாரில், “ஈரோட்டைச் சேர்ந்த பாண்டியன் (எ) முருகவேல், அவரது மனைவி மாரியம்மாள் (எ) லதா ஆகியோர்  நித்யா ஈமு பார்ம்ஸ் மற்றும்  நித்யா பவுல்ட்ரி பார்ம்ஸ் என்ற பெயரில் நிறுவனம் தொடங்கி, பல்வேறு முதலீட்டுத் திட்டங்கள் குறித்து விளம்பரம் செய்தனர். இதை நம்பி ஏராளமானோர் கோடிக்கணக்கில் முதலீடு செய்தனர். ஆனால், அறிவித்தபடி முதலீட்டாளர்களுக்கு பணம் தராமல் ஏமாற்றிவிட்டனர். எனவே, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/xk68zUO

Post a Comment

0 Comments