Crime

மதுரை மாவட்டம், சிலைமான் அருகிலுள்ள சக்கிமங்கலம் சமத்துவபுரம் பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில் இளைஞர் ஒருவர் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தார். சிலைமான் போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். அதில், இறந்தவர் கல்மேடு அருகிலுள்ள கருப்ப பிள்ளையேந்தலைச் சேர்ந்த வழிவிட்டான் மகன் பிரேம் (26) எனத் தெரிய வந்தது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

முதல் கட்ட விசாரணையில், பிரேம் மீது ஏற்கெனவே சில வழக்குகள் பதிவாகியுள்ளது தெரிய வந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3pJBO8e

Post a Comment

0 Comments