Crime

சென்னை, புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் 5 வயதுச் சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த நபருக்கு 5 ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் 5 வயதுச் சிறுமியைக் கடந்த 14.12.2013 அன்று, வீட்டு உரிமையாளர் மகன் பூபாலன் என்பவர் தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்துச் சிறுமியின் தாய் W-14 திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இப்புகார் மீது உரிய விசாரணை மேற்கொண்டு, போக்சோ சட்டப்பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பூபாலன் (23) கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3nIERNp

Post a Comment

0 Comments