Crime

அதிமுகவில் இரட்டைத் தலைமையால் நடக்கும் கூத்துகளைப் போல், 'டி.ஜி.பி.', 'ஸ்பெஷல் டி.ஜி.பி.' என்ற நியமனம் தமிழகக் காவல்துறையை அடியோடு நாசப்படுத்திவிடும் உச்சநீதிமன்ற வரையறைகள் மற்றும் தமிழ்நாடு காவல்துறை சீர்திருத்தச் சட்டம் ஆகியவற்றுக்கு எதிரான இந்த நடவடிக்கையைத் திரும்பப் பெறவேண்டும் என துரைமுருகன் எச்சரித்துள்ளார்.

சமீபத்தில் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ராஜேஷ்தாஸ் டிஜிபியாக பதவி உயர்த்தப்பட்டார். அவருக்கு சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி என பதவி புதிதாக உருவாக்கப்பட்டு அளிக்கப்பட்டது. ஏற்கெனவே உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி சட்டம் ஒழுங்கு டிஜிபிக்கு இணையாகவோ அல்லது ஆலோசகர் என்கிற ரீதியில் ஓய்வுப்பெற்ற டிஜிபிக்களை நியமிக்கக்கூடாது என்ற உத்தரவு உள்ள நிலையில் அதை மீறும் வகையில் இந்த நியமனம் உள்ளதாக கருத்து எழுந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ktDI7U

Post a Comment

0 Comments