
சென்னை: சென்னை அடையாறு, இந்திராநகர், 5-வது குறுக்கு தெருவைச்சேர்ந்தவர் கனகராஜ் (76). சென்னைஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஞானமணி (72). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. முதுமை காரணமாக இவர்கள், தங்களை பார்த்துக்கொள்ள, கடலூரைச் சேர்ந்த தனது உறவினர் கனகசண்முகம் என்பவரை வேலைக்கு அமர்த்தினர். அவருக்கு மாதம்ரூ.30 ஆயிரம் ஊதியம் தரப்பட்டது.
இந்நிலையில், முதுமை மற்றும் உடல் நலக்குறைவால் கனகராஜ் காலமானார். இதனால், ஞானமணி தேவையான அனைத்து விதமான உதவிகளையும் கனகசண்முகம் செய்து வந்தார். இந்நிலையில், அவர் வேலையிலிருந்து திடீரென நின்றுவிட்டார். அவரது நடவடிக்கையால் சந்தேகப்பட்ட ஞானமணி வீட்டு பீரோவில் இருந்த நகைகளை சோதித்துப் பார்த்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/xfEIZ32
0 Comments