
சென்னை: சென்னை மாதவரம், உள்வட்ட சாலை பகுதியைச் சேர்ந்தவர் ராஜு பர்ஜாபதி (20). தனியார் நிறுவன ஊழியரான இவர் கடந்த 2-ம் தேதி இரவு பணி முடித்து மாதவரம், உள்வட்ட சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு ஆட்டோவில் வந்த 5 பேர் கும்பல் ராஜுவிடம் தகராறு செய்து கம்பால் தாக்கி அவரிடமிருந்து செல்போனைபறித்துக் கொண்டு தப்பியது.
தாக்குதலில் காயமடைந்த ராஜு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், சிகிச்சை முடிந்த பின்னர் இதுகுறித்து மாதவரம் போலீஸில் புகார் அளித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/rsTDNJO
0 Comments