Crime

மதுரை: மதுரை நத்தம் ரோடு திருப்பாலை அருகே மாடக்கோன் நகரைச் சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகள் லேகாஸ்ரீ (21). இவர், திருப்பரங்குன்றம் பொறியியல் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்தார்.

நேற்று முன்தினம் இரவு குருவிக் காரன் சாலை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றார். அப்போது, கன்டெய்னர் லாரி அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனாலும், அவர் உயிரிழந்தார். போக்குவரத்து போலீஸார் லாரி ஓட்டுநர் சின்ன சொக்கி குளம் பகுதியைச் சேர்ந்த அருண்குமாரை(38) கைது செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/mfKdCxX

Post a Comment

0 Comments