Crime

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் உள்ளிட்ட 3 பேரிடம் ரஷ்ய நாட்டு வணிகக் கப்பலில் வேலை வாங்கித் தருவதாக ரூ.5.60 லட்சம் மோசடி செய்தவர் மீது சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முதுகுளத்தூரைச் சேர்ந்த வேல் முருகன் மகன் இளங்கோவன்(21). இவர் கப்பல் பொறியியலில் பட்டயப் படிப்பு படித்துவிட்டு வேலை தேடி வந்தார்.

அப்போது, அவரது நண்பர் ராமநாதபுரத்தைச் சேர்ந்த வாஞ்சிநாதன், முகநூலில் வெளிநாட்டு வணிக கப்பலில் வேலை என்ற விளம்பரத்தை பார்த்து, அதற்கான மொபைல் எண்ணை இளங்கோவனிடம் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில், இளங்கோவன் அந்த எண்ணில் தொடர்பு கொண்டபோது, அவரது ஆவணங்களை அந்த நபர் அனுப்பக் கூறியுள்ளார். அதன்பின் ரஷ்ய நாட்டு வணிகக் கப்பலில் வேலை என்றும், நவம்பர் 7-ல் தூத்துக்குடி துறைமுகம் மூலம் வேலைக்கு அனுப்பு வதாகவும் கூறியுள்ளார். அதை நம்பிய இளங்கோவன், அவர் கூறிய வங்கிக்கணக்கில் கூகுள் பே மூலம் கடந்த அக்டோபர் 3-ல் ரூ.2 லட்சம் அனுப்பினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/N2JQDWO

Post a Comment

0 Comments