
ஈரோட்டில் ஜவுளிக்கடை உரிமையாளரை கடத்தி பணம் பறித்த வழக்கில் நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஈரோடு கருங்கல்பாளையம் குயிலான்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஜவுளிக்கடை உரிமையாளர் சிவசுப்பிரமணியத்தை கடந்த மாதம் 25-ம் தேதி கடத்திய கும்பல், ரூ.15 லட்சத்தை மிரட்டிப் பறித்துச் சென்றது. இந்நிலையில் தற்போது மீண்டும் அந்த கும்பல் பணம் கேட்டுமிரட்டியுள்ளது. இது தொடர்பான புகாரின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3EHFKKM
0 Comments