Crime

கொத்தடிமைகளாக புதுச்சேரியில் வாத்து மேய்க்க அடைக்கப்பட்டு, மீட்கப்பட்ட 5 தமிழகச் சிறுமிகளிடம் நடந்த விசாரணையின்போது அவர்கள் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளானது தெரியவந்தது. பத்துப் பேர் கொண்ட கும்பலில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போக்சோ உள்ளிட்ட ஐந்து பிரிவுகளுக்கு மேல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியிலிருந்து கரும்பு வெட்டும் கூலித்தொழிலுக்காக சிலர் புதுச்சேரி கிராமப் பகுதிக்கு வந்துள்ளனர். அப்போது, வாத்து மேய்க்கும் பணிக்காக, புதுச்சேரி கோர்க்காடு கீழ்சாத்தமங்கலம் கிராமத்தில் வாத்து மேய்க்கும் பண்ணை வைத்திருப்போர், தந்தையில்லாத ஐந்து வளர்ப்புப் பெண் குழந்தைகளை இரண்டரை ஆண்டுகளாக கொத்தடிமைகளாக வைத்திருந்தனர். வாத்துகள் பெரியதானவுடன் கேரளத்துக்கு அனுப்பும் வரை இவர்கள் இப்பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3p8qxMh

Post a Comment

0 Comments